Monday 6 July, 2009



மார்க்கெட் பிளஸ் I ன் சிறப்பு !

சென்ற பதிவில், எல்.ஐ.சி யின் நிதி நிர்வாகிகள் வாடிக்கையளர்களின் யூலிப் நிதியை சிறப்பாக நிர்வகிக்கும் திறனும், நீடித்து இருக்கும் பாலிசிகளுக்கு சராசரியாக 18% லாபம் கிடைக்கும் என்று எழுதியிருந்தேன். அதற்குச் சான்றாக கீழே மார்க்கெட் பிளஸ் I திட்டத்தின் வளர்ச்சியைப் பார்ப்போம்.

மார்க்கெட் பிளஸ் I அறிமுக தேதி: 17.06.08

அன்றைய முகமதிப்பு: ரூ. 10.00

06.06.2009 அன்று மதிப்பு: 11.9183

354 நாட்களில் வளர்ச்சி விகிதம்: 11.9183 %

இதே காலகட்டத்தில் சென்செக்ஸின் மாற்றம்

ஜூன் 2008 சராசரி சென்செக்ஸ்: 14997.28

மே 2009 சராசரி சென்செக்ஸ் : 10911.20

சராசரி சென்செக்ஸ் வீழ்ச்சி: (-) 27.24%

பங்குச்சந்தையின் வீழ்ச்சியின் போது கூட வளர்ச்சி கண்ட திட்டம் மார்க்கெட் பிளஸ் I என்பது புரிகிறதல்லவா !

Sunday 5 July, 2009


சென்ற வாரம், எல்.ஐ.சி “ஜீவன் சாத்தி பிளஸ் என்ற பெயரில் புதிதாக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதைப் பற்றிய விவரங்களை இப்போது பார்ப்போம்.

“ஜீவன் சாத்தி பிளஸ் - இது கணவன் – மனைவி இருவரின் ஆயுளையும் ஒரே பாலிஸியின் கீழ் காப்பீடு செய்யும் திட்டம். இருவருக்கும் தனித்தனியே காப்பீட்டுத் தொகையை நிர்ணயித்துக் கொள்ளலாம். கணவன் காப்பீட்டுத் தொகைக்குச் சமமாகவோ அல்லது அதற்கு உட்பட்டோ மனைவியின் காப்பீட்டுத்தொகை அமையும்.

பயன்கள்:

பாலிசியின் முதிர்வின் போது:

அதுவரை கணக்கில் சேர்ந்துள்ள அத்துனை யூனிட்டுகளையும் சேர்த்து அன்றைய தினத்தின் யூனிட்டுகளின் மதிப்பின் அடிப்படையில் முதிர்வுத்தொகை வழங்கப்படும்.

மனைவி இறப்பின்:

பாலிசி முதிர்வின் முன்பே கணவர்க்கு முன் மனைவி இறப்பின் மனைவிக்குறிய காப்பீட்டுதொகை வழங்கப்படும். விரும்பினால், அத்தொகையை அதே திட்ட்த்தில் முதலீடு செய்யலாம்.

தொடர்ந்து, பாலிஸியின் கீழ் பிரிமியம் செலுத்த வேண்டும்.

கணவர் இறப்பின்:

பாலிசி முதிர்வின் முன்பே மனைவிக்கு முன் கணவர் இறப்பின் கணவருக்குறிய காப்பீட்டுதொகை வழங்கப்படும்.

செலுத்தவேண்டிய அனத்துப் பிரிமியங்களுக்கும் சமமான யூனிட்டுகள் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.

இந்த இரண்டு தொகையும் சேர்த்து உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது தொடர்ந்து அதே திட்ட்த்தில் முதலீடு செய்யலாம்.

வருங்காலத்தில் பிரிமியம் செலுத்த வேண்டாம்.

கணவன்-மனைவி இருவரும் இறந்துவிட்டால்?

பாலிசி முதிர்வின் முன்பே இருவருக்கும் கணவன்-மனைவி இருவரும் இறந்துவிட்டால், இருவருக்கும் உண்டான காப்பீட்டுத்தொகைகள், எதிர்காலத்தில் செலுத்தவேண்டிய பிரிமியங்கள், பாலிசிக்கணக்கில் சேர்ந்துள்ள யூனிட்டுகள் அன்றைய மதிப்பில் இவை மூன்றும் சேர்த்து வாரிசுக்கு வழங்கப்படும்.

ஆக இப்படி ஒரே கல்லில் பல மாங்காய்கள் !

இத்திட்டம் பங்குச்சந்தையுடன் (ULIP) இணைந்த திட்டம். அதனால் நாம் செலுத்தும் பிரிமியத்தின் ஒரு பகுதி காப்பீட்டிற்காகவும் பெரும் பகுதி சந்தையில் முதலீடு செய்யவும் பயன்படும்.

காப்பீட்டுத்தொகை எவ்வளவு ?

நாம் செலுத்தும் ஆண்டுப்பிரிமியத்தின் 5 மடங்கிலிருந்து 30 மடங்கு வரை தேர்வு செய்யலாம். 40 வயதைத் தாண்டியிருந்தால் அதிகபட்சம் 20 மடங்கு. ஒற்றைப்பிரிமியம் (SINGLE PREMIUM) செலுத்தினால் 1.25 முதல் 5 மடங்கு வரை. 40 வயதைத் தாண்டியிருந்தால் அதிகபட்சம் 2.5 மடங்கு.

என்னென்னெ தவணையில் செலுத்தலாம்?

ஒற்றைப் பிரிமியம், ஆண்டு, அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதம் (ECS)

எவ்வளவு செலுத்தலாம்?

குறைந்தபட்சமாக ஆண்டிற்கு ரூ10000 முதல் அதற்குமேல் ஆயிரத்தின் மடங்கில்.

கட்டத்தவறினால்?

மூன்றாண்டுகளுக்குள் கட்ட்த்தவறினால், 2 ஆண்டுகளுக்குள் புதுப்பிக்க வேண்டும். மூன்றாண்டுகளுக்கு மேல் கட்டியிருந்தால், கணக்கில் போதிய அளவு பணம் இருக்கும் வரையில் காப்பீட்டிற்குரிய பிரிமியம் பிடித்துக் கொள்ளப்படும். காப்பீடு அதுவரையில் தொடரும்.

நிறுத்திக்கொண்டால்?

தொடங்கி குறைந்தது மூன்றாண்டுகளுக்குப் பின் கணக்கில் உள்ள தொகை வழங்கப்படும்.

எந்தவிதமான முதலீடுகள்?

Bond Fund, Secured Fund, Balanced Fund, Growth Fund என்ற நான்கில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். ஒரு ஆண்டில் நான்கு முறை இலவசமாக மாற்றம் செய்து கொள்ளலாம்.


Allocation charge:

For regular premium policy AC ranges from 29% to 27.5% in first year (see table).

Premium

1st year

2nd & 3rd year

4th year-

Upto 1,50,000

29%

5%

2.5%

1,50,001 – 2,50,000

28%

5%

2.5%

2,50,001 -

27.5%

5%

2.5%

Single premium up to 15 lakhs - 4.25%
Single premium above 15lakhs - 4.00%

Top-Up premium -1.25%

எல்.ஐ.சி....

மத்திய அரசின் மணிமகுடம்!

பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களின் நடுவே நிதானமாக பயணித்துவரும் எல்.ஐ.சி யின் நிதி நிர்வாகிகள் உண்மையிலேயே பாராட்டுக்கு உரியவர்கள்.

தொடர்ந்து செலுத்தி வரும் வாடிக்கையாளர்கள் 18% ற்கு மேல் லாபம் ஈட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

நல்ல பல அம்சங்களை உள்ளடக்கி வந்திருக்கும் ஜீவன் சாத்தி பிளஸ்உங்களின் சேமிப்புகளில் ஒன்றாக இருக்கட்டும்.

Saturday 4 July, 2009


“யோகக்ஷேமம் வஹாம்யஹம்

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இன்சூரன்ஸ் துறையில் விற்பனைப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தில் இந்தப்பதிவைத் தொடங்கியிருக்கிறேன்.

முன்பைவிட மக்களிடையே ஆயுள் காப்பீடு சம்பந்தமான விழிப்புணர்வு அதிகமாகி இருக்கிறது. அதேசமயம், எதைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து குழப்பங்களும் அதிகமாகியுள்ள சூழலில் இதில் பதிவிடும் கட்டுரைகளும் தகவல்களும் உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பொதுப்பார்வைக்கு விட்டுவிடுகிறேன்.

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருளை அறியவும்.